நாயை தலைகீழாக கட்டிவைத்து 3 நபர்கள் செய்த கொடூரம்.! கொந்தளித்த மக்கள்.! அதிர்ச்சி பின்னணி.!

நாயை தலைகீழாக கட்டிவைத்து 3 நபர்கள் செய்த கொடூரம்.! கொந்தளித்த மக்கள்.! அதிர்ச்சி பின்னணி.!


dog-murdered-in-kerala


கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த அடிமலதுராவில் வசித்து வரும் கிறித்துராஜ் என்பவர் ‘புரூனோ’ என்ற நாயை கடந்த 8 ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளார். இவரின் வீட்டின் அருகே எதாவது சத்தம் கேட்டல் உடனே புரூனோ குரைத்து வீட்டின் உரிமையாளருக்கு சிக்னல் கொடுத்துவிடுமாம்.

இந்தநிலையில், கிறித்துராஜ் வீட்டின் அருகே வசிக்கும் சிறுவர்கள், அவரது வீட்டின் வழியே செல்லும் போதெல்லாம், நாய் குறைத்து வந்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த சிறுவர்கள், நாயை படகில் கட்டி வைத்து கட்டையால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். அங்கு நடந்த சம்பவத்தின் வீடியோவை  நபர் ஒருவர் கிறிஸ்துராஜுக்கு அனுப்பிய நிலையில் அவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

அந்த வீடியோவில் படகில் நாயை தலைகீழாக கட்டி வைத்து மூன்று பேரும் கட்டையால் கொடூரமாக தாக்குகிறார்கள்.  நாயை கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் குறித்து கிறித்துராஜ் போலீசில் புகாரளித்தார். மேலும், கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பான புகாரில் சுனில், சில்வஸ்டர் மற்றும் மைனர் சிறுவன் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் ட்விட்டரில் டிரெண்டானதையடுத்து #JusticeForBruno என்ற ஹேஷ்டேக் மூலம் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குரல் எழுப்பியுள்ளனர்.