இந்தியா மருத்துவம்

ரயிலில் பயணித்த பெண்ணிற்கு ஏற்பட்ட பிரசவ வலி! அங்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Summary:

delivery pain in train


மகாராஷ்டிரா மாநிலம் அம்பிவாலி பகுதியில் இருந்து குர்லா நோக்கி செல்லும் ரெயிலில் இஷ்ரத் ஷேக் என்ற கர்ப்பிணி பெண் பயணம் செய்துள்ளார்.  ரயிலில் பயணிக்கும்போது இஷ்ரத் ஷேக்கிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீசார் உடனடியாக தானே ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு ரூபாய் கிளினிக்கிற்கு கொண்டு வந்துள்ளனர்.  அந்த கிளினிக்கில் இஷ்ரத் ஷேக்கிற்கு பிரசவத்தில் ஆண் குழந்தை  பிறந்துள்ளது.

பிரசவத்தில் தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமுடன் இருப்பதாக ஒரு ரூபாய் கிளினிக்கின் தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார். மேலும், பயணிகளுக்கு அவசரகால சிகிச்சை அளிக்க பல ரயில்வே நிலையங்களில் எங்களது கிளினிக்குகள் செயல்படுகின்றன.  இதனை செயல்படுத்த வாய்ப்பு வழங்கிய ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என கூறினார்.
 


Advertisement