இந்தியா

கடத்தப்பட்டதாக கருதப்பட்ட கணவன்.! மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! விசாரணையில் வெளியான ஷாக் தகவல்.!

Summary:

கடத்தப்பட்டதாக கருதப்பட்ட கணவன் வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த சம்பவத்தை அறிந்து மனைவி கட

கடத்தப்பட்டதாக கருதப்பட்ட கணவன் வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த சம்பவத்தை அறிந்து மனைவி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் பட்டிடபபான். இவருக்கு திருமணம் ஆன நிலையில், இவர் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக் கிழமை இவர் கடத்தப்பட்டுவிட்டதாக அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பட்டிடபபான் மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் கட்டியா ரயில் நிலையத்தில் வேறொரு பெண் ஒருவருடன் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரித்ததில், இருவரும் காதலித்து வருவதாகவும், குடும்பத்தை விட்டு வேறொரு பகுதிக்கு சென்று ஒன்றாக சேர்ந்து வாழ திட்டமிட்டிருப்பதும் தெரியவந்தது.

அதேபோல் பட்டிடபபானுடன் ஓட்டம் பிடித்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் தனது மகளை பட்டிடபபான் கடத்திச் சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் கடத்தப்பட்டுவிட்டதாக பதறி போய் புகார் அளித்த மனைவி, அவர் வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடிக்க திட்டமிட்டிருப்பதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.


Advertisement