தந்தையால் பாலியல் தொல்லையை சந்தித்த ஸ்வாதி - டெல்லி மகளிர் ஆணைய தலைவர் அதிர்ச்சி பேட்டி.!

தந்தையால் பாலியல் தொல்லையை சந்தித்த ஸ்வாதி - டெல்லி மகளிர் ஆணைய தலைவர் அதிர்ச்சி பேட்டி.!


Delhi Women Rights Commission Leader Swati Express about Father Abused

 

4 வயது வரை தந்தையுடன் இருக்கும்போதே நான் பல துயரத்தை கடந்துவிட்டேன் என மகளிர் ஆணைய தலைவி கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி மகளிர் ஆணையம் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல குரல்களை பதிவு செய்து வருகிறது. மேலும், ஆணையம் சார்பில் பெண்களுக்கு தேவையான பல விழிப்புணர்வுகளும் வழங்கப்படுகின்றன. 

இந்த ஆணையத்தின் தலைவராக ஸ்வாதி மல்லிவால் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தனது சொந்த தந்தையால் பாலியல் தொல்லை அனுபவித்த துயரம் குறித்து விவரித்துள்ளார்.

delhi

இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் நான்காவது படித்த வரையில் மட்டுமே தந்தையோடு இருந்தேன். அதற்குள்ளாகவே நான் பல துயரங்களை சந்தித்துவிட்டேன். 

எனது சொந்த தந்தையால் நான் பாலியல் அத்துமீறலை சந்தித்தேன். அவர் என்னை அடித்தபோது, நான் பயந்து படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொண்டேன். அவை இன்னும் எனது நினைவுகளில் இருக்கின்றன" என பேசினார்.