இந்தியா

சாலையை கடக்கையில் சோகம்.. ஜீப் மோதி இளைஞர் நிகழ்விடத்திலேயே பலி.. பதைபதைப்பு சி.சி.டி.வி காட்சிகள்..!

Summary:

சாலையை கடக்கையில் சோகம்.. ஜீப் மோதி இளைஞர் நிகழ்விடத்திலேயே பலி.. பதைபதைப்பு சி.சி.டி.வி காட்சிகள்..!

சாலையை கடந்து செல்ல முயற்சித்தவர் மீது SUV ஜீப் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம் நடந்துள்ளது. விபத்து தொடர்பான வீடியோ பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி நகரில் உள்ள ஜன்பாத் பகுதியில் 39 வயதுடைய இளைஞர், சாலையை கடந்து கொண்டு இருந்தார். அப்போது, அவ்வழியே SUV ஜீப் ஒன்று வந்துள்ளது. 

அந்த ஜீப் இளைஞரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி, நடைபாதையை இடித்து சேதப்படுத்தியவாறு அங்கிருந்து சென்றது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். 

இந்த சம்பவம் இன்று காலை நடைபெற்ற நிலையில்; விபத்தில் பலியானவருக்கு 39 வயது இருக்கும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அவரின் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. கார் ஓட்டுனருக்கு வலைவீசப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வீடியோ வைரலாகி வருகிறது. 


Advertisement