சுகாதாரத்துறை அமைச்சரையும் விட்டுவைக்காத கொரோனா! டெல்லி சுகாதாரத்துறை பொறுப்பு, துணை முதல்வரிடம் ஒப்படைப்பு!

சுகாதாரத்துறை அமைச்சரையும் விட்டுவைக்காத கொரோனா! டெல்லி சுகாதாரத்துறை பொறுப்பு, துணை முதல்வரிடம் ஒப்படைப்பு!



delhi health minister affected by corona

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. டெல்லியில் இதுவரை 47,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,1,904 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் அதிகம் பாதித்த மாநிலங்களில் டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தநிலையில், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் இருந்ததால் அவர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 16-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் நோய்த்தொற்று இல்லை என தெரியவந்தது. 

delhi health minister

மீண்டும் அடுத்த நாள்  2-வது முறையாக சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவர் வகித்து வந்த சுகாதாரத்துறை பொறுப்பு, துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களுக்காக உங்கள் ஆரோக்கியத்தையும் பார்க்காமல் 24 மணிநேரமும் உழைத்தீர்கள், விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.