இந்தியா

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி செய்தியை அறிவித்த டெல்லி அரசு.!

Summary:

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி செய்தியை அறிவித்த டெல்லி அரசு.!

பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டுவரியை 30 விழுக்காட்டிலிருந்து 19 புள்ளி 4 விழுக்காடு குறைப்பதாக டெல்லி அரசு புதிய அறிவிப்பு ஒன்றை தெரிவிந்துள்ளது.

கடந்த மாதம் அதாவது தீபாவளி பண்டிகையை ஒட்டி பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.

இந்நிலையில் டெல்லி அரசு பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டுவரியை 19 புள்ளி 4 விழுக்காடு குறைப்பதாக அறிவித்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் குறைகிறது. மேலும் இந்த விலை குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.


Advertisement