அடேங்கப்பா.. விக்குக்குள் வைத்து தங்கம் கடத்தி, அதிகாரிகளிடம் வசமாக சிக்கிய இளைஞர்.. வைரல் வீடியோ.!Delhi Customs Officers Seized Captured Gold Smuggling Man Wig

டெல்லி விமான நிலையத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்ட இளைஞரை சுங்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்த கடத்தல் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் மற்றும் பிற ஆபரணங்கள், சிகிரெட்டுகள் என பல பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும், அவை சுங்கத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்படுவதும் வாடிக்கையாகியுள்ளது. இதில், தங்கக்கடத்தல் கும்பல் உபயோகம் செய்யும் திட்டங்கள் அவ்வப்போது தெரியவந்து அதிகாரிகளுக்கே அதிர்ச்சி கொடுக்கும்.

இந்த நிலையில், அபுதாபியில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பயணியின் தலை சற்று வித்தியாசமாக இருந்துள்ளது. இதனால் அவரின் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை விசாரணை மையத்திற்கு அழைத்து சென்று உடமைகளை சோதனை செய்துள்ளனர். 

அவர் கையில் வைத்திருந்த பேக்கில் எதுவும் தேறாத நிலையில், அவரின் தலைமுடியை கவனித்தபோது மாற்றம் தெரிந்துள்ளது. அவரிடம் நடந்த விசாரணையில் தங்க கடத்தலை ஒப்புக்கொண்ட நிலையில், அவரின் விக்குக்கு அடியில் 630.45 கிராம் அளவுள்ள தங்கம் மீட்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.30.55 இலட்சம் ஆகும். இதனையடுத்து, சம்பந்தப்பட்டவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.