இந்தியா Covid-19

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பரிசோதனை முடிவு! மருத்துவர்கள் கொடுத்த ரிசல்ட் என்ன?

Summary:

delhi cm Kejriwal corona tests result is negative

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. டெல்லியில், கொரோனா வைரஸ் தாக்குதல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. அவருக்கு நேற்று முன்தினம், காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்ட நிலையில், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்வதாக இருந்த சந்திப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனை நடைபெற்றது.  

இந்தநிலையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் உறுதியாகி உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
 


Advertisement