இந்தியா

டெல்லியில் சுவாசப் பிரச்சனை உள்ள மக்களின் நுரையீரல் கருப்பாக மாறி வருகிறதா? வெளியான அதிர்ச்சித் தகவல்.!

Summary:

delhi air pollution public health very danger

டெல்லியில் காற்று மாசுபாடு குறித்து மருத்துவர் ஒருவர் தெரிவிக்கும்போது சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி மக்களின் நுரையீரல் கருப்பாக மாறி வருகிறது என்று தெரிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளது.

இந்தியாவிலேயே அதிக காற்று மாசுபாடு நிறைந்த நகரமாக தேசிய தலைநகர்  டெல்லி விளங்குவது வேதனை அளிக்கிறது. இதனால் அங்கு வாழும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எப்பொழுதும் காற்று மாசுபாடு நிறைந்து காணப்படும் இந்நகரம் தற்சமயம் பனிக்காலம் தொடங்கியுள்ளதால் கூடுதல் மாசுபாடு அடைந்துள்ளது.

எந்த நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஒரு பலனும் கிடைக்கப்பெறாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் வழக்கத்துக்கு மாறாக காற்று மாசுபாடு ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.

Image result for delhi air pollution

இதுகுறித்து டெல்லி மருத்துவர் ஒருவர் விரிவாக கூறும்போது: 

தற்போதுள்ள மாசுபட்ட காற்றினால் ஒருவர் டெல்லி தெரிவில் நடந்தாலே அவர் ஒரு நாளைக்கு 15 முதல் 20 சிகரெட் அடித்ததற்கு சமமான பாதிப்பு அவருக்கு ஏற்படும். 

தற்போதெல்லாம் சுவாச பிரச்னை என வரும் மக்களை சோதிக்கும் போது அவரது நுரையீரல் கருப்பாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி தான் ஏற்படுகிறது. நான் 30 வருடங்களாக மருத்துவராக இருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக இருந்த மக்களின் நுரையீரல் நிறம், அண்மை காலமாக கருப்பாகி வருவது மிகவும் சோகமானது.” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


 


Advertisement