கொரோனா ஊரடங்கு! வீட்டை விட்டு வெளியே சென்ற தந்தை! குட்டிமகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!



daughter-stopped-father-from-going-outside

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனோ வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொடூர கொரோனா வைரஸ் சீனாவை அடுத்து இத்தாலியிலும், வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கோரத்தாண்டவம் ஆடுகிறது. நாளுக்கு நாள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியநிலையில், தற்போது 1600க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

Coronovirus

இத்தகைய கொடிய வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதனையும் மீறி ஆர்வ கோளாறில்  வெளியே வருபவர்கள்  போலீசாரிடம் அடிவாங்கிகொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில் அருணாச்சலப்பிரதேசத்தில்  வாலிபர் ஒருவர் வீட்டிலிருந்து வெளியே செல்ல புறப்பட்டுள்ளார். அப்போது, அவரது மகள் கதவை மூடி, அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் பிரதமர் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்று சொல்லி இருக்கிறார். வீட்டிலேயே இருங்கள் என்று மழலைக் குரலில் தந்தையை எச்சரித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

iii