59 வயதில் கணவரை இழந்து தனிமையில் சிரமப்பட்ட தாய்.! மகள் எடுத்த அதிரடி முடிவு!

59 வயதில் கணவரை இழந்து தனிமையில் சிரமப்பட்ட தாய்.! மகள் எடுத்த அதிரடி முடிவு!


daughter-arrange-mother-to-get-second-marriage

கேரள மாநிலம் திருச்சூரில் வசித்து வருபவர் ரதி மேனன். 59 நிறைந்த இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி கணவர் வீட்டிற்கு சென்ற நிலையில் ரதி மேனன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தாயார் தனிமையில் தவிப்பதை உணர்ந்த அவரது மகள் பிரசிதா, அவரை கவனித்துக்கொள்ள ஒரு துணை வேண்டும் என எண்ணியுள்ளார். இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவர் தகுந்த மணமகனை தேட ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையிலேயே அதே பகுதியில் மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த 63 வயது நிறைந்த திவாகரன் என்பவரை குறித்து அறிந்து அவரை திருமணம் செய்துவைக்க பிரசிதா முடிவு செய்துள்ளார். திவாகரன்க்கும் 2 மகள்கள் உள்ளனர். அவர் வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் திவாகரன் மற்றும் அவரது மகள்களிடமும் உருக்கமாக பேசி பிரசிதா திருமணத்திற்கு சம்மதம் வாங்கிய நிலையில் தனது அம்மாவையும் பேசி சம்மதிக்க வைத்துள்ளார்.

daughter

அதனை தொடர்ந்து இருவருக்கும் திருச்சூர் திருவம்பாடி கோவிலில் திருமணத்தை நடத்த முடிவு செய்யபட்டு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து பிரசிதா கூறுகையில், எனது அம்மாவுக்கு நாங்கள் 2 பெண்பிள்ளைகள். அப்பா உயிரோடு இருக்கும்போதே எங்களுக்கு திருமணமாகிவிட்டது. நாங்கள் கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் அம்மா தனிமையில் சிரமபடுகிறார். அதற்காகத்தான் இந்த திருமண ஏற்பாட்டை செய்தோம் என தெரிவித்துள்ளார்.