ஆடு திருடிய தலீத் இளைஞர்களை தலைகீழாக கட்டி தொங்கவிட்ட கிராம மக்கள்.!



Dalit boys attack in Andhra Pradesh

தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தை சேர்ந்த கொமுராஜுலா ராமுலு. விவசாயியான இவர் ஆடு மேய்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது ஆட்டு மந்தையிலிருந்து ஆடு காணாமல் போயுள்ளது.

இதனையடுத்து அந்த பகுதியில் ஆடும் வைத்துக் கொண்டிருந்த தேஜா மற்றும் அவரது நண்பர்களான பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்கள் மீது கொமுராஜுலா ராமுலுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை தனது ஆட்டு பண்ணைக்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு இருவரையும் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடியில் தீ வைத்து புகை மூட்டி கடுமையாக தாக்கியுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பட்டியலின இளைஞர்களை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.