படப்பிடிப்பின் போது அட்லியிடம் விஜய் கூறிய விஷயம்.! ஆச்சரியமடைந்த அட்லி..
மழை வெள்ள பாதிப்புக்கு இடையே நிவாரண முகாமில் தங்கியிருந்த பெண்ணுக்கு திருமணம்! மக்கள் மகிழ்ச்சி!
மழை வெள்ள பாதிப்புக்கு இடையே நிவாரண முகாமில் தங்கியிருந்த பெண்ணுக்கு திருமணம்! மக்கள் மகிழ்ச்சி!

கேரளாவில் கடந்த 100 வருடங்களுக்கு பிறகு தொடர்ந்து இரண்டு மாதங்களாக விடாது கனமழை பெய்து வருகிறது. கேரளாவின் அணைத்து மாவட்டங்களிலும் வெல்ல நீர் சூழ்ந்துள்ளது.
மக்கள் அனைவரும் தங்க இடம் இல்லாமல் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இதனால் பலரது குடும்பங்களில் ஏற்பட்டு செய்யப்பட்டிருந்த பலவிதமான விழாக்கள் தடைபட்டுள்ளது.
இந்நிலையில் நிவாரண முகாமில் தங்கியிருந்த பெண்ணுக்கு பாரம்பரிய முறைப்படி கோவிலில் எளியமுறையில் திருமணம் நடந்தது. கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்தால் வடக்கு மலப்புரம் மாவட்டத்திலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வடக்கு மலப்புரம் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவர்களில் அஞ்சு (வயது 24) என்பவர் அதே முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அஞ்சுவிற்கு அவரது வீட்டினர் திருமண ஏற்பட்டு செய்திருந்தனர்.
கேரளாவில் ஏற்பட்ட துயரத்தால் அஞ்சுவின் திருமணத்தை தள்ளி வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால் முகாமில் அவர்களுடன் இருந்தவர்கள் திருமணத்தை தள்ளிவைக்க வேண்டாம் என்று வற்புறுத்தியதால் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.
இதுபற்றி மணமகன் ஷைஜூ குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது அவர்களும் சம்மதித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று காலை அஞ்சு நிவாரண முகாம் அருகில் உள்ள கோவிலுக்கு பாரம்பரிய சிவப்பு பட்டு சேலை அணிந்து நடந்து சென்றார். மணமகன் ஷைஜூவும் குடும்பத்தினருடன் அங்கு வந்துசேர்ந்தார்.
கோவிலில் எளியமுறையில் அவர்களது திருமணம் நடந்தது. பின்னர் அஞ்சு மணமகன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இந்த திருமணம் நிவாரண முகாமில் மழை பாதிப்பினால் சோகத்தில் இருந்தவர்கள் மத்தியில் சிறிது உற்சாகத்தை ஏற்படுத்தியது.
கேரளாவில் மழை, வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான திருமண விழாக்கள் தள்ளிவைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.