கொரோனா அச்சுறுத்தல்! இன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 15 வரை அனைத்து விசாக்களும் ரத்து! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!

Corono


corono-ZJNFGX

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோயாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று நள்ளிரவு முதல் அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படும் என்ற அதிரடி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளால் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சத்தில் முன்னதாகவே அனைத்தையும் தடுத்து நிறுத்தும் விதமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் மத்திய அரசு இன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 15 வரை அனைத்து நாடுகளின் பயணிகளுக்கும் வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Corono o

மேலும் ஐநா.சபை அதிகாரிகள், சர்வதேச அமைப்புகள், வேலைவாய்ப்பு திட்ட விசாக்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பிப்ரவரி 15 ஆம் தேதியிலிருந்து இந்தியா திரும்பிய சீனா,இத்தாலி, ஈரான்,கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாட்டை சேர்ந்தவர்களும், இந்தியர் உட்பட அனைத்து மக்களையும் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது மத்திய அரசு.