திருமணமான சில மாதங்களிலேயே சடலமாக கிடந்த காதல் தம்பதியினர்! தெரியவந்த அதிர்ச்சி உண்மையால் கடும் பீதியில் போலீசார்கள்! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா

திருமணமான சில மாதங்களிலேயே சடலமாக கிடந்த காதல் தம்பதியினர்! தெரியவந்த அதிர்ச்சி உண்மையால் கடும் பீதியில் போலீசார்கள்!

கேரளா பண்டாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜிதின். 30 வயது நிறைந்த இவர் மாவெளிகரா, துளசிபவன் பகுதியைச் சேர்ந்த தேவிகா தாஸ் என்ற இளம்பெண்ணை காதலித்து,  கடந்த மே 6ம் தேதி திருமணம் செய்து கொண்டார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே ஜிதினை  திருமணம் செய்து கொள்வதற்காக, தேவிகா தாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ஆனால் அப்போது தேவிகா மைனர் என்பதால் போலீசார் ஜிதின் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர். அதனைத் தொடர்ந்து தேவிகா அரசு கூறிய இடத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தேவிகாவிற்கு திருமண வயது நிரம்பி விட்டநிலையில், இருவரும் பதிவு  திருமணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் சென்னிதளாவில் உள்ள மகாத்மா பள்ளி அருகே வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் புதுமண தம்பதியினர் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தற்கொலை செய்துகொண்டனர். ஜிதின் தூக்கிலும், தீபிகா தாஸ் படுக்கையிலும் பிணமாக கிடந்துள்ளனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஜிதின் ஓவியர் எனவும், அவருக்கு போதிய வருமானம் இல்லாத நிலையில்,  கடும் சிரமங்களை சந்தித்து வந்த இருவரும் தற்கொலை  செய்துகொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.  இந்நிலையில்  உயிரிழந்த தேவிகா தாஸ்க்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட போலீசார் 10 பேரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார்கள் தங்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டிருக்குமோ என பெரும் பீதியில் உள்ளனர். 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo