இந்தியா

கொரோனா பாதிப்பு மிக அதிகம் உள்ள நாடுகள்..! 4வது இடத்திற்கு சென்றது இந்தியா..!

Summary:

Corono india moved to 4th place world wide

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் கொரோனா பாதிப்பில் உலக அளவில் நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது இந்தியா.

சீனாவின் உகான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் கொரோனாவின் பிடியில் சிக்கி பெரும் இழப்புகளை சந்தித்துவருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தநிலையில் தற்போது கொரோனா பாதிப்பு இந்தியாவில் பலமடங்கு அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் 10 கும் கீழ் இருந்த இந்தியா தற்போது நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது.

அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கும் நிலையில் 297,001 என்ற எண்ணிக்கையுடன் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.


Advertisement