இந்தியா

கொரனோ வைரஸ் உருவாக இதுதான் காரணமா? பீதியை கிளப்பும் சீனாவில் படித்த இந்திய மாணவர்.!

Summary:

Corono forming frmo freezer china return indian medical student

சீனவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கேரளா மாநிலத்தில் மூன்று பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

உஹான் நகரில் விற்பனை செய்யப்பட்ட ஒருவகை பாம்பில் இருந்து இந்த வைரஸ் பரவியதாக சீனா அரசாங்கம் கூறுகிறது. இல்லை இல்லை, சீனாவின் பயோ வெப்பம் ஆய்வு கூடத்தில் இருந்துதான் இந்த வைரஸ் பரவியதாக அமெரிக்காகவும், இஸ்ரேலும் குற்றம் சாட்டி வருகிறது.

வௌவால்களில் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் எனவும் பலரும் பலவிதமான கருத்துக்களை கூறிவரும் நிலையில் சீனாவில் மருத்துவம் பயின்று தமிழகம் திரும்பியுள்ள மாணவர் ஒருவர் கூறுகையில், சீன மக்கள் பாதியளவு வேக வைக்கும் இறைச்சியையே விரும்பி உண்ணுகின்றனர் என்றும், இறைச்சியை பலநாட்கள் ஃபிரீசரில் வைத்து பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வெகுநாட்களாக ஃபிரீசரில் வைக்கப்பட்ட இறைச்சியை பயன்படுத்தியதால் இந்த வைரஸ் உருவாகி, பரவியிருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அந்த மாணவர் கூறியுள்ளார்.


Advertisement