இந்தியா

கோரதாண்டவமாடும் கொரோனா! இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு!

Summary:

Corono affected people in india

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது, இத்தகைய கொடூர வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகளும் பெருமளவில் திணறி வருகின்றது.  இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்தியாவில் நேற்றுவரை கொரோனோவால்  70,756 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் இந்தக் கொடிய வைரசால் 2,293 பேர் உயிரிழந்திருந்தனர். அதனைத்தொடர்ந்து இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3525 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74, 281 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 122 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 2,415 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 24,385 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 47,480 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த விவரங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.


Advertisement