இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்வு! மத்திய சுகாதாரத்துறை தகவல்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்வு! மத்திய சுகாதாரத்துறை தகவல்!


Corono affected people counts in india

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது . கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1 லட்சத்து 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா  பரவுவதை தடுக்க பல நாடுகளிலும்   ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகள் திணறி வருகின்றன.

India

இந்நிலையில் இந்தியாவிலும்  கொரோனா வைரஸ் பரவியநிலையில், தற்போது  பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 12, 759 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 1,515 ஆக அதிகரித்துள்ளது.