தாஜ் ஓட்டல் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா அறிகுறி! என்ன காரணம்?

தாஜ் ஓட்டல் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா அறிகுறி! என்ன காரணம்?



Corona symptoms for taj hotel employees

மும்பை தாஜ் ஓட்டலின் ஊழியர்களில் 6 பேருக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் காணப்பட்டன. மும்பையில் நேற்று ஒரே நாளில் 189 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர் என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தியதால் கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியது.  டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியது.

இந்தநிலையில், மும்பை தாஜ் ஓட்டலின்  ஊழியர்களில் 6 பேருக்கு  கொரோனா வைரஸின் அறிகுறிகள் காணப்பட்டதால் அந்த 6 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைவரும் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

corona
மும்பையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் மட்டும், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1146 ஆக உள்ளது, இவர்களுக்கு  பல்வேறு அரசு மருத்துவமனைகளில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில், மும்பை தாஜ் ஓட்டலில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்  தங்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு பல மருத்துவர்கள் இந்த ஓட்டலுக்கு வந்து தங்கினர். இத்தகைய சூழ்நிலையில், ஓட்டலின் 6 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.