கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.! கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது.
இந்தியாவில் சமீப காலமாக குறைந்துவந்த கொரோனா பரவல் நேற்றய தினத்தை விட இன்றைய தினம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் புதிதாக 13,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று 15,223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,10,883 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 151 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,52,869 ஆக அதிகரித்துள்ளது.