இந்தியா Covid-19

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,780 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு.! பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

Summary:

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று கொஞ்சம்

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. இந்தியாவில் அதிகப்படியானோர் கொரோனாவால் பாதிப்படைந்து வருவதால் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்தியாவில் கொரோனா தினசரி கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. அதில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,82,315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,06,65,148 உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 3,780 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,26,188 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போதுவரை 1 கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 731பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் தற்போது 34 லட்சத்து 87 ஆயிரத்து 229  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Advertisement