இந்தியா Covid-19

இந்தியாவில் கிடுகிடுவென அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு! நேற்று ஒருநாள் மட்டும் எவ்வளவு?

Summary:

Corona increased india

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது. பலி எண்ணிக்கையும் 1,306 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று 40 ஆயிரத்தை தாண்டியது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 2,411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த எண்ணிக்கை நேற்று அதை மிஞ்சி 24 மணி நேரத்துக்குள் 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement