இந்தியாவில் இதுவரை அல்லாத புதிய உச்சம்! 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் இதுவரை அல்லாத புதிய உச்சம்! 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி!


corona increased in india

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் முதன் முதலில் கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி சீனாவில் இருந்து கேரளாவுக்கு வந்த மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சில நாட்களிலேயே அந்த மாணவி கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

இதனையடுத்து கொரோனா பரவலின் வேகம் அதிகரிக்க தொடங்கியது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில்40,425 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் புதிதாக 9,518 பேர் கோரனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

coronaஇந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 18 ஆயிரத்து 43 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 681 பேர் பலியான நிலையில், கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 7 லட்சம் பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 மாநிலங்களாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கார்நாடகா, ஆந்திரா உள்ளது.