ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.!

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு காலமாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது. எந்த நேரமும


corona for afganisthan returns

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு காலமாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது. எந்த நேரமும் துப்பாக்கிகளுடன் வலம் வருகிற தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டை சேர்ந்த மக்கள் பலர் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்கின்றனர். ஆப்கானிஸ்தானில் உள்நாட்டினருக்கு மட்டுமல்லாமல், வெளிநாட்டினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனால் உள்நாட்டு மக்களும், வெளிநாட்டு மக்களும் அங்கிருந்து தப்பித்து வந்தால்போதும் என்று கருதுகின்றனர். அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டுக்கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 

இந்தநிலையில், ஆப்கானிஸ்தனில் இருந்து புதுடெல்லி விமான நிலையத்திற்கு வந்த 78 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 78 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.