கேரள விமான விபத்தில் சிக்கிய பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

கேரள விமான விபத்தில் சிக்கிய பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!


corona confirmed to flight accident passengers

நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு 191 பேருடன் துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில்  தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒடு பாதையிலிருந்து விலகியதால் விபத்து ஏற்பட்டு, விபத்தில் விமானி உள்பட 18 பேர் பலி ஆனார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு  அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில், அங்கு ஏற்பட்ட விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கெரோனா உறுதியாகி உள்ளது. இதனையடுத்து காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனை செய்ததில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona

இதனை தொடர்ந்து, மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் உள்பட பலர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். துபாயில் இருந்து புறப்படும் முன்பு பல பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு பின்னர் விமானத்தில் வந்துள்ளனர். பலர் பரிசோதனை செய்யாமல் வந்துள்ளனர். எனவே சிகிச்சை பெறுபவர்கள் தனிவார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.