தமிழகம் இந்தியா Covid-19

இந்தியாவில் செப்டம்பர் அல்லது அக்டோபரில் 3வது கொரோனா அலை தொடங்கலாம்..!! முக்கிய தகவலை வெளியிட்ட பிரபலம்..

Summary:

செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்க வாய்ப்பு இருப்பதாக ந

செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்க வாய்ப்பு இருப்பதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸால் இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதன் பலனாக தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில்  செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்க வாய்ப்பு இருப்பதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், கொரோனா இரண்டாவது அலையை இந்தியா மிக சிறப்பாக கையாண்டுள்ளது எனவும், கொரோனாவின் 2வது அலையை சிறப்பாக கையாண்டதால் புதிய தொற்று எண்ணிக்கை சரிந்து வருகிறது எனவும் கூறிய அவர், செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதை எதிர்கொள்வதற்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


Advertisement