பயங்கர விபத்து! சுரங்கப்பாதையில் டெம்போ மீது SUV கார் மோதி காங்கிரஸ் முக்கிய புள்ளி பரிதாப பலி! நள்ளிரவில் நடந்த பயங்கரம்..! பதைபதைக்கும் வீடியோ...!!!
புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது. டெம்போ மீது எஸ்யூவி கார் மோதியதில் காங்கிரஸ் நிர்வாகி துஷார் பூம்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெம்போ மீது மோதிய எஸ்யூவி
பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச் சேர்ந்த 35 வயதான துஷார் பூம்கர், நண்பர்களுடன் அதிகாலை சுமார் 1.20 மணியளவில் மும்பை நோக்கி எஸ்யூவி காரில் பயணம் செய்தார். அப்போது முன்னால் சென்ற சரக்கு டெம்போவின் பின்புறத்தில் கார் அதிவேகமாக மோதி நொறுங்கியது. ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்திருந்த பூம்கர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி, பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உச்சக்கட்ட அதிர்ச்சி! இந்தியாவில் 2025 இல் சாலை விபத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை! மத்திய அரசு வெளியிட்ட பகீர் அறிக்கை.....!!!
6 பேருக்கு காயம்; ஒருவர் தீவிர சிகிச்சையில்
விபத்தில் எஸ்யூவி ஓட்டுநர், அதில் பயணித்த மற்றவர்கள் மற்றும் டெம்போ ஓட்டுநர், கிளீனர் உள்ளிட்ட மொத்தம் 6 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அதிவேகம் காரணமா?
முதற்கட்ட விசாரணையில் வாகனம் அதிவேகமாக இயக்கப்பட்டதே சாலை விபத்து ஏற்பட முக்கிய காரணமாக இருக்கலாம் என்று லோனாவாலா நகர காவல் நிலைய ஆய்வாளர் சச்சின் பாட்டீல் தெரிவித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார், துஷார் பூம்கரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். விபத்தால் சுரங்கப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மீட்புக் குழுவினர் சேதமடைந்த வாகனங்களை விரைவாக அகற்றி போக்குவரத்தை மீண்டும் சீரமைத்தனர்.
A tragic road accident on the Pune-Mumbai Expressway's Missing Link tunnel claimed the life of 35-year-old Tushar Bhumkar, a Congress worker from Wakad in Pimpri Chinchwad, during the early hours of Friday.
— Hate Detector 🔍 (@HateDetectors) August 7, 2026
The mishap occurred at around 1.20 am when the SUV carrying Bhumkar and… https://t.co/MeKCctHD5W pic.twitter.com/T9JJvf1Nvr
இதையும் படிங்க: முதலிரவு அறையில் புதுப்பெண் சொன்ன அந்த ஒரு வார்த்தை! சந்தேகத்தால் ஆடையை விலக்கிப் பார்த்த மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி...!!!