பரபரப்பான சூழ்நிலையில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!!

பரபரப்பான சூழ்நிலையில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!!


congress-competing-blocks


வருகிற மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகிறது. தேசிய கட்சிகள் உள்பட மாநில கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது. 

இந்தநிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும், ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். 

மேலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 15 பேரின் பட்டியல், மற்றும் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் தலைமை  வெளியிட்டுள்ளது.