அரசியல் இந்தியா

காங்கிரஸ் பொதுச் செயலாளராகும் பிரியங்கா காந்தி; தொண்டர்கள் உற்சாகம்.!

Summary:

congres - utrapradesh - secratry - prianka gandhi

உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தியை அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி நியமனம் செய்து அதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி அவ்வப்போது தனது சகோதரருடன் இணைந்து முக்கிய பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அவரது அரசியல் ஈடுபாடு என்று பார்த்தால், தனது தாயார் சோனியா காந்தியின் சொந்த தொகுதியான ரேபரேலி தொகுதியில் மட்டும் தேர்தல் சமயத்தில் தீவிர பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டார்.  

இந்நிலையில், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதனிடையே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை உத்தரபிரதேச மாநில கிழக்கு பகுதியின் பொதுச் செயலாளராக  நியமிப்பது அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதுதான் இவர் முதன் முறையாக கட்சி சார்பில் ஏற்றுக் கொள்ள இருக்கும் பதவியாகும். வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் பதவி ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement