தொழிலதிபராக நான் தோல்வியடைந்துவிட்டேன் - காபி டே உரிமையாளர் எழுதிய உருக்கமான கடிதம்

தொழிலதிபராக நான் தோல்வியடைந்துவிட்டேன் - காபி டே உரிமையாளர் எழுதிய உருக்கமான கடிதம்



Coffee day founder final letter

மிகவும் பிரபலமான கஃபே காபி டே உரிமையாளரான வி.ஜி.சித்தார்தா நேற்று மாலை முதல் காணாமல் போய்விட்டார். இவர் கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் ஆவார். 

அவரது ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலத்தின் படி தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நேத்ராவதி ஆற்றில் குதித்து சித்தாரா தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Coffee day

இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி சித்தாரா தனது ஊழியர்களுக்கு கடைசியாக எழுதிய கடிதம் தற்போது காவல்துறைக்கு கிடைத்துள்ளது. அதில், தொழிலதிபராக தான் தோல்வி அடைந்து விட்டதாகவும், வணிகத்தை சரியான முறையில் கொண்டு செல்ல தவறிவிட்டதாகவும் சித்தார்தா குறிப்பிட்டுள்ளார். 

என் மீது நம்பிக்கை வைத்த அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் நீண்ட நாட்களாக போராடி பார்த்தேன், ஆனால் இந்த நெருக்கடியை என்னால் சமாளிக்க முடியவில்லை. அதனால் எல்லாவற்றையும் விட்டுவிடலாம் என முடிவு செய்துவிட்டேன். புதிய நிர்வாகிகளுடன் இந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்துங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

Coffee day

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதற்கு முழுக்க முழுக்க தான் மட்டுமே பொறுப்பு. நான் செய்த பல பரிவர்த்தனைகள் என்னைத் தவிர என்னை சார்ந்த யாருக்கும் தெரியாது என்றும், சொத்து விவரம் மற்றும் அதன் மதிப்புகளை இதில் இணைத்துள்ளேன். இந்த சொத்துகளை வைத்து நிச்சயம் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், என்று அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். 

ஆனால் இந்த கடிதம் உண்மையில் சித்தார்தா தான் எழுதினாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.