இந்தியா

டீச்சரை கொலை செய்ய பணம் கொடுத்த 4 ஆம் வகுப்பு மாணவன்! கொலையின் பகீர் பின்னணி.

Summary:

Class 4 student stabs tutor to death for refusing to help mother financially

மும்பையில் டியூசன் டீச்சர் ஒருவரை அவருடன் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவன் சொல்லி 14 வயது மாணவன் ஒருவன் கொலை செய்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கோவண்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா அஸ்லாம் ஹுசூய்(30). கணவனைப் பிரிந்து மகனுடன் வாழ்ந்து வரும் இவர் அப்பகுதியில் டியூசன் எடுத்து வருகின்றார். இவரிடம் அதேபகுதியை சேர்ந்த 9 வயதுடைய நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனும், 14 வயதுடைய மாணவன் ஒருவரும் படித்துவந்துள்னனர்.

நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனின் தாயிடம் இருந்து டியூசன் டீச்சர் 2000 ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி கேட்டபோது மாணவனின் தாயை டியூசன் டீச்சர் தரக்குறைவாக பேசி பணம் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த நான்காம் வகுப்பு மாணவன் தனது நண்பனிடம் அந்த டீச்சரை கொலை செய்ய டீல் பேசியுள்ளேன். இதனை அடுத்து டியூசன் முடிந்ததும் இருவரும் சேர்ந்து டீச்சரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

இந்த கொலை குறித்து போலீசாருக்கு சரியாக குழு கிடைக்காதநிலையில் சந்தேகத்தின் பேரில் மாணவர்களை விசாரித்ததில் உண்மை வெளிவந்துள்ளது. டீச்சரை கொலை செய்ய முதலில் 1000 ரூபாய் டீல் பேசியதாகவும், அதன்பின்னர் 5000 டீல் பேசியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அந்த மாணவர்கள்தான் டீச்சரை கொலை செய்தார்களா? அல்லது வேறு யாரேனும் இதன் பின்னணியில் உள்ளனரா என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்னனர்.


Advertisement