
Church closed for corona
கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று இந்தியாவிலும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், கடந்த மார்ச் 24 ந்தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 14 ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வது தவிர்க்கப்பட்டு உள்ளது. அத்தியாவசி தேவைகளுக்கான கடைகள் தவிர்த்து பிற கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு உள்ளன. அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் புனித வெள்ளி தினம் இன்று கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. ஆனாலும் கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ஆலய வாசலில், கொரோனா வைரஸ் பாதிப்பினை முன்னிட்டு அனைத்து மதசடங்குகளும் மற்றும் பிற வழிபாடுகளும் அடுத்த உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்காக பிரார்த்தனை செய்து கொள்வோம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement