கொரோனா வைரஸ் பாதிப்பால் விமானத்தில் ஏற்றப்படாத இந்திய பெண்! எனக்கு திருமணம் என்னை அழைத்துச் செல்லும்படி பெண் கோரிக்கை!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. பாம்பு சூப்பில் இருந்து பரவியதாக கூறப்படும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 300 கும் மேலான மக்கள் உயிர் இழந்துள்ளனர்.
இந்தநிலையில், சீனாவில் இருந்து தன்னை மீட்குமாறு, இளம்பெண் ஒருவர் பெற்றோருக்கு வீடியோ அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மத்திய அரசு சிறப்பு விமானங்களை உஹான் மாகாணத்திற்கு அனுப்பி வைத்தது.

அப்போது சீனாவிலிருந்து விமானம் புறப்பட்ட போது அதிகப்படியான காய்ச்சல் காரணமாக 10 இந்தியர்கள் மட்டும் விமானத்தில் ஏற்றப்படவில்லை. அந்த 10 பேர்களில், ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த அன்னம் ஜோதி என்பவரும் ஒருவர். இந்தநிலையில் அன்னம் ஜோதி தமக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதால், உடனடியாக தாய்நாடு திரும்புவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.=