பெற்றோர் திட்டியதால் ஆத்திரம்; 90 அடி நீர்வீழ்ச்சியில் குதித்து தற்கொலை முயற்சி; இயற்கை அன்னையின் மகிமையால் தப்பித்த நெகிழ்ச்சி.!Chhattisgarh Young Girl Suicide Attempt Fall Down 90 Feet Waterfalls

 

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இளம்பெண்ணின் பெற்றோர், அவர் செல்போன் உபயோகம் செய்வதை கண்டித்து இருக்கின்றனர். 

இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் அங்குள்ள சித்திரக்கோட் நீர்வீழ்ச்சிக்கு சென்று, 90 அடி உயரத்திலிருந்து கீழே குதித்துள்ளார். தற்போது மழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கானது இருபுற கரைகளை தொட்டு செல்கிறது. 

 

இந்நிலையில், 90 அடி உயரத்தில் இருந்து தற்கொலை செய்ய எண்ணி நீருக்குள் குதித்த பெண்மணி, தண்ணீரில் இருந்து செல்லப்பட்டு சில அடி தூரங்களிலேயே கரை ஒதுங்கினார். 

நல்ல வேலையாக அவருக்கு எவ்வித உயர் பாதிப்பும் ஏற்படவில்லை. அவரை மீட்ட காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

அவரை காப்பாற்ற வேண்டி அங்கிருந்த பலரும் கூச்சலிட்ட நிலையில், ஒருவர் நிகழ்வை வீடியோ எடுத்து இருக்கிறார்.