இந்தியா

லாரி - டிராக்டர் மோதி பயங்கர விபத்து.. 5 பேர் பலி, 15 பேர் படுகாயம்..! உறவினர்கள் கண்ணீர்.!

Summary:

லாரி - டிராக்டர் மோதி பயங்கர விபத்து.. 5 பேர் பலி, 15 பேர் படுகாயம்..! உறவினர்கள் கண்ணீர்.!

தேசிய நெடுஞ்சாலையில் லாரி - டிராக்டர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். 17 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள கரியபெண்ட் நகரில் இருந்து மின்பூர் நகர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் பயணம் செய்தது. இந்த டிராக்டரில் 25 க்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்துகொண்டு இருந்தனர். 

இந்த நிலையில், டிராக்டர் எதிர்பாராத விதமாக எதிர்திசையில் வந்த கனகர லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளாகவே, டிராக்டரில் பயணம் செய்த மக்கள் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்துள்ளார். 

இந்த விபத்தில் 5 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 17 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் அலறித்துடித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கரியபெண்ட் காவல் துறையினர், படுகாயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகெல், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம், காயமடைந்தோரின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.


Advertisement