அடடே... இனி ஆதார் கார்டுக்கு குட்பை.!! புதிய செயலியை அறிமுகப்படுத்திய மத்திய அரசு.!! அட்டகாசமான சிறப்பம்சங்கள்.!!



central-govt-to-introduce-new-app-for-adhaar-card

இந்தியாவில் அரசு தொடர்புடைய ஆவணங்களில் ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாக இருக்கிறது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் அரசு சார்ந்த வேலைகளுக்கும் ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களது ஆதார் கார்டை எப்போதும் அவர்களுடனே வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் பொதுமக்களின் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக மத்திய அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஆதார் கார்டு புதிய செயலி

இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக இந்த புதிய செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அமைச்சர் இந்த செயலியை நேற்று அறிமுகப்படுத்தினார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் இனி மக்கள் தங்களது ஆதார் கார்டை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த செயலியின் மூலம் ஆதார் கார்டின் தகவல்களை சரி பார்க்க முடியும் என கூறினார்.

மத்திய அமைச்சரின் சமூக வலைதளப்பதிவு

இந்த செயலி தொடர்பான வீடியோ காணொளியை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் இந்த புதிய செயலி தனிநபர் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த புதிய செயலியின் மூலம் பயனர் தன்னுடைய முக அடையாளத்தை பயன்படுத்தி தேவையான தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: உபி மாடல்.? "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா.." மருமகனுடன் கம்பி நீட்டிய மாமியார்.!!

புதிய செயலியின் சிறப்பம்சங்கள்

இந்த புதிய ஆதார் கார்டு செயலியின் மூலம் தேவையான தகவல்களை மட்டுமே பயனர்கள் பகிர்ந்து கொள்ளலாம். இதனால் தனிநபர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் இந்த புதிய செயலியில் பயனரின் முக அடையாளத்தை வைத்து லாகின் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மற்றவர்கள் செயலியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கிறது. மேலும் இந்த செயலியை ஸ்கேன் செய்து தேவையான தகவல்களை பெற முடியும். இதனால் ஆதார் கார்டை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆதார் கார்டு தொடர்பான சரிபார்ப்பு மற்றும் பிழை திருத்துதல் ஆகியவற்றையும் இந்த செயலியின் மூலமே எளிதாக மேற்கொள்ள முடியும். இனி ஆதார் மையத்திற்கு சென்று திருத்த வேண்டிய அவசியம் இல்லை. தற்போது பீட்டா வெர்சனில் சோதனையில் உள்ள இந்த செயலி விரைவிலேயே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு இடைஞ்சல்... 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.!!