மேம்பாலத்திலிருந்து தலைகுப்புற கீழே விழுந்த கார்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.!

மேம்பாலத்திலிருந்து தலைகுப்புற கீழே விழுந்த கார்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.!


car-fell-down-from-flyover-video-goes-viral

தெலுங்கானாவில் மேம்பாலத்திலிருந்து கார் ஒன்று அதிவேகமாக கீழே விழும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள பரத்நகர் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஓன்று டிவைடரில் மோதி அதிவேகத்தில் கீழே விழுந்துள்ளது.

குறிப்பிட்ட பாலத்திற்கு அடியில் சிலர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கார் கீழே விழுந்ததில் காரில் இருந்த இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி உயிர் இழந்துள்ளார். மேலும், காரில் இருந்த 5 பேர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்ததில், காரில் இருந்தவர்கள் மூசாபேட்டு என்னும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது, கார் திடீரென டிவைடரில் மோதி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதையடுத்து விபத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான பதறவைக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.