இந்தியா

உபேர் காரில் புக் செய்து பயணித்த இளம்பெண்! தூங்கியபடி காரை ஓட்டிய டிரைவர்! கடுப்பில் பெண் செய்த செயல்! வைரல் வீடியோ!

Summary:

car driver sleeping


தனியார் நிறுவனத்தின் கார் டிரைவர் தூங்கி தூங்கி விழுந்ததால் வேறு வழியில்லாமல் தானே காரை ஓட்ட முன் வந்த பெண் பயணியின் செயல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மும்பையைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி திவ்யா நாய்க் என்ற பெண் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி புனேவிலிருந்து அந்தேரிக்குச் செல்ல உபேர் கார் நிறுவனம் ஒன்றில் காரை புக் செய்து பயணித்துள்ளார். கார் சிறிது தூரம் சென்றவுடன் டிரைவருக்கு போன் வந்துள்ளது. ஆனால் கார் டிரைவர் வாகனத்தை ஓரம் நிறுத்தி பேசாமல் காரை இயக்கியப்படியே செல்போனில் பேசி சென்றதாக கூறப்படுகிறது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தேஜஸ்வினி பயத்துடன் காரை சரியாக ஓட்டுமாறு டிரைவரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு பிறகும் டிரைவர் தூங்கி வழிந்துள்ளார். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த தேஜஸ்வினி , டிரைவரிடம் இருந்து காரை வாங்கி அவரே ஓட்ட ஆரம்பித்துள்ளார். 

இதனையடுத்து தேஜஸ்வினி கார் ஓட்டியபோதும் டிரைவர் சீட்டுக்கு அருகில், நன்றாக தூங்குவதை வீடியோ எடுத்து தேஜஸ்வினி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement