விமானத்தில், ஆபாச படம் காட்டி பெண்ணிடம் சில்மிஷம் செய்த தொழிலதிபர்! இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!



business man tortured young girl in flight


மும்பையில் இருந்து தனியார் விமானம் ஒன்று நேற்று முன் தினம் சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் மும்பையைச் சேர்ந்த 56 வயது நிரம்பிய தொழிபதிபர் ராகேஷ் மோகன் என்பவர் பயணித்துள்ளார்.

அப்போது அவருடைய சீட்டிற்கு அருகே இளம்பெண் ஒருவர் தன் கைக்குழந்தையுடன் அமர்ந்து பயணம் செய்துள்ளார். இந்நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ராகேஷ் தன்னுடைய செல்போனில் ஆபாசபடங்களை பார்த்ததாக கூறப்படுகிறது.

flight

அப்போது அவர் தன்னுடைய செல்போனை அந்த பெண் பார்க்கும் படி திருப்பி காட்டியுள்ளார். மேலும் சில சில்மிஷ செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்,  விமான பணிப்பெண்ணிடம் புகார் அளித்துள்ளார்.

விமான பணிப்பெண்கள் அவரை கண்டித்து, அதன் பின் அந்த பெண்ணிற்கு வேறொரு இருக்கையை கொடுத்துள்ளனர். விமானம் சென்னை வந்து சேர்ந்த்ததும் இச்சம்பவம் குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு தொழிலதிபரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.