திடீரென சரிந்து விழுந்த நான்கு மாடி கட்டடம்! உயிருடன் புதைந்த 40 க்கும் மேலானோர்!

திடீரென சரிந்து விழுந்த நான்கு மாடி கட்டடம்! உயிருடன் புதைந்த 40 க்கும் மேலானோர்!


building-collapse-in-mumbai


மும்பையில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 12 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

மும்பை டோங்ரியில் டண்டெல் தெருவில் உள்ள கேசர்பாய் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. கட்டடத்தின் இடிபாடுகளில் 40 க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உதவியுடன் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடிய நிலையில் கட்டத்திற்குள் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 40 முதல் 50 பேர் வரை சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.அப்பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில்,  கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதே இந்த சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த கட்டட விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதலமைச்சர், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.