நட்பே துணை! யாருகிட்ட.. சிங்க கூட்டத்தையே தெறிக்க விட்ட எருமை மாடு! செம கெத்தாக வைரலாகும் வீடியோ!!

நட்பே துணை! யாருகிட்ட.. சிங்க கூட்டத்தையே தெறிக்க விட்ட எருமை மாடு! செம கெத்தாக வைரலாகும் வீடியோ!!


buffalow-throw-lions-video-viral

தன்னை உணவாக்க எண்ணிய எருமை கூட்டத்தையே  எருமை மாடு ஒன்று அலறியடித்து ஓட வைத்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போதெல்லாம் சமூக வலைதளங்களில் மெய் மறந்து ரசிக்கும் வகையிலும், அதே நேரத்தில் ஆச்சரியமூட்டும் வகையிலும் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகளின் க்யூட்டான மற்றும் திறமைமிக்க வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அவ்வாறு தற்போது எருமை மாடு சிங்கத்தையே தெறித்து ஓட வைத்த வீடியோ பெருமளவில் வைரலாகி வருகிறது.

அதில், எருமை மாடு ஒன்று சிங்கத்திடம் சிக்கி கொண்டுள்ளது. சிங்கங்கள் அதனைத் தாக்கி அவற்றிற்கு உணவாக்க முயற்சி செய்து கொண்டிருந்தபோது, அங்கு மற்றொரு எருமை மாடு வந்து அவற்றையெல்லாம் தாக்கியுள்ளது. உடனே அங்கிருந்த சிங்கங்கள் தலைதெறிக்க ஓடியுள்ளன.

இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது பெருமளவில் பரவி லைக்ஸ்களை குவித்து வருகிறது.