இந்தியா லைப் ஸ்டைல் டெக்னாலஜி

ஜியோ வை விட இரண்டு மடங்கு அதிக டேட்டா! அதிரடி ஆஃபரில் அசத்தும் முன்னணி நிறுவனம்

Summary:

bsnl offers data 2 times more than jio for rs.399

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு வெறும் 399 ரூபாயில் 74 நாட்களுக்கு 3.21 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால் வசதியும் தரும் புதிய ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த டேட்டா ஜியோ வழங்கும் டேட்டாவை விட இரண்டு மடங்கு அதிகம்.

ஒரு காலத்தில் அசுர விலையில் இருந்த இன்டர்நெட் மொபைல் டேட்டா இன்று குறைவான விலையில் கிடைக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ என்பதை யாராலும் மறுக்க முடியாது. மொபைல் கால்ஸ் மற்றும் இணைய டேட்டா வசதியில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது ஜியோ. இதனால் ஏர்டெல், வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது.

bsnl க்கான பட முடிவு

தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லும் பெரும் இழப்பை சந்தித்தது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு சலுகை அறிவிப்புகள் வெளியிட்டு வருகின்றன. 

இந்நிலையில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு வெறும் 399 ரூபாயில் 74 நாட்களுக்கு 3.21 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால் வசதியும் தரும் புதிய ஆஃபரை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அறிமுகப்படுத்தப்பட்டு இந்த விலையில் ஒருநாளைக்கு 1 ஜிபி டேட்டா வழங்கிய பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது கூடுதலாக 2.21 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன்மூலம் 74 நாட்களில்மொத்தம் 237.54GB டேட்டாவை வழங்குகிறது.

இதற்கு இணையாக ஜியோ வழங்கும் சேவையில் 349 ரூபாய்க்கு 70 நாட்களுக்கு 1.5 ஜிபி டேட்டா மட்டுமே ஒரு நாளைக்கு வழங்குகிறது. ஜியோ வழங்கும் டேட்டாவை விட பிஎஸ்என்எல் தற்பொழுது இரண்டு மடங்கு அதிக டேட்டாவை வழங்குகிறது. பிஎஸ்என்எல் இன் இந்த புதிய ஆஃபர் ஜியோ உடன் போட்டியிடும் அளவிற்கு சிறந்த ஆஃபராக வாடிக்கையாளர்களுக்கு அமைந்துள்ளது. மேலும் இதனுடன் அன்லிமிடெட் கால் வசதி மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதி தருகிறது பிஎஸ்என்எல். இந்த புதிய ஆஃபரினை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து உள்ளது பிஎஸ்என்எல்.


Advertisement