உடனே கல்யாணத்த நிப்பாட்டுங்க!! மாப்பிளை வீட்டாருக்கு ஷாக் கொடுத்த மணமகள்!! அடுத்து நடந்த அதிர்ச்சி..

திருமணத்தின்போது நடந்த துப்பாக்கி சுடும் கொண்டாட்டத்தில் மணமகளின் மாமா காயம்பட்டதால் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட சம்பவமானது உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர்கள் ஷாசத் மற்றும் இராம். இவர்கள் இருவருக்கும் கடந்த புதன்கிழமை அன்று திருமணம் நடக்க இருந்தது. இதனால் இரண்டு வீட்டாரின் உறவினர்களும் திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர்.
வடமாநிலங்களில் சில திருமண நிகழ்வின் போது துப்பாக்கிசூடு நடத்துவது ஒரு வழக்கமாக கொண்டாடப்பட்டுவருகிறது. அந்தவகையில் இந்த திருமணத்திலும், மணமகன் வீட்டாரின் துப்பாக்கிகளை வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மணமகளின் மாமா மீது துப்பாக்கி குண்டு படவே, அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்துள்ளார். இதனால் பயந்துபோன மணமகள், இவ்வளவு பேர் முன்னிலையில் துப்பாக்கியை வைத்து விளையாடும் இவர்கள், நாளைக்கு பிரச்சனை என்றால் என்னெல்லாம் செய்வார்கள் என்ற பயத்தில் தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என கூறி, திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இதனை அடுத்து மணமகளின் வீட்டார், மணமகன் மற்றும் அவரது உறவினர்களை அடித்து உதைத்து, அவர்களை சிறைபிடித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் மணமகளின் மாமாவை துப்பாக்கியால் சுட்டதாக மணமகன் ஷாசத், அவருடைய சகோதரர்கள் பப்பு, சனு ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.