ஹோட்டல் ரூமுக்குள் ஒன்றாக சென்ற காதல் ஜோடி! திறந்து பார்த்த ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! பகீர் சம்பவம்!

ஹோட்டல் ரூமுக்குள் ஒன்றாக சென்ற காதல் ஜோடி! திறந்து பார்த்த ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! பகீர் சம்பவம்!


boy-friend-killed-lover-in-hotel-room

பெரியபட்னா தாலுக்காவில் உள்ள ஹரலஹள்ளி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் அபூர்வா ஷெட்டி. 21 வயது நிறைந்த அவர் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வருகிறார். அவர் விஜய நகரில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

இவர் ஹின்கல் பகுதியைச் சேர்ந்த ஆஷி என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரும் ஹோட்டலில் ரூம் புக் செய்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றுள்ளனர். பின் அறையை விட்டு வெளியே சென்ற ஆஷி நீண்ட நேரமாகியும் ரூமிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் ரூமிற்கு இன்டர்காம் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். யாரும் பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில் போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கு விரைந்து அறையை திறந்து பார்த்துள்ளனர். அங்கு அபூர்வா சடலமாக கிடந்துள்ளார். அவரது மூக்கில் இருந்து இரத்தம் வழிந்துள்ளது. தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதலுக்கு பிறகு ஆஷியை கைது செய்தனர்.

boy friend

அபூர்வா மற்றும் ஆஷியின் காதல் விவகாரம் தெரிந்த நிலையில் அபூர்வாவின் குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். ஆனாலும் அபூர்வா, ஆஷி இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் இடையே என்ன பிரச்சினை நடந்தது? ஏன் ஆஷி அபூர்வாவை கொன்றார்? என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் என கூறப்படுகிறது.