திடீரென எதிரே வந்த பைக்... பேருந்து சக்கரத்தில் சிக்கி தந்தையின் கண்முன்னே 10 வயது சிறுவன் பலியான சோகம்..!

திடீரென எதிரே வந்த பைக்... பேருந்து சக்கரத்தில் சிக்கி தந்தையின் கண்முன்னே 10 வயது சிறுவன் பலியான சோகம்..!


boy-dead-by-road-accident-pudhuchery

இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பேருந்து சக்கரத்தில் சிக்கி தந்தையின் கண்முன்னே 10 வயது சிறுவனின் உயிர் பிரிந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாவாணன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் கிஷ்வந்த். பன்னீர்செல்வம் தினமும் தனது மகனை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு கொண்டு சென்றுவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதேபோல இன்று மகனை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கொண்டிருந்தபோது, பவழம் சாவடி அருகே எதிர்திசையில் ஒரு பைக் வந்துள்ளது. 

pudhuchery

இதனால் அவர் தனது பைக்கின் வேகத்தை குறைத்த நிலையில், திடீரென நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் இருவரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து சக்கரத்தில் 10 வயது சிறுவன் கிஷ்வந்த் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.