லேப்டாப் பேகில் இருந்த காணாமல் போன குழந்தையின் உடல்...!! பக்கத்து வீட்டுக்காரரை தேடி வரும் போலீசார்..!!

லேப்டாப் பேகில் இருந்த காணாமல் போன குழந்தையின் உடல்...!! பக்கத்து வீட்டுக்காரரை தேடி வரும் போலீசார்..!!


Body of missing child in laptop bag...!! The police are looking for the neighbor..

2 வயது சிறுமியின் உடல் லேப்டாப் பேகில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள, சூரஜ்பூர் தேவ்லா கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளி ஒருவரின் இரண்டு வயது மகள் காணாமல் போனார். இது குறித்து அந்த குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து காணாமல் போன குழந்தையை தேடி வந்தனர். இந்நிலையில், தங்களுடைய வீட்டுக்கு அருகே இருக்கும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக குழந்தையின் குடும்பத்தினர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த வீட்டில் சோதனையிட்டனர். அப்போது, லேப்டாப் பேக்கில் குழந்தையின் உடல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
குழந்தை காணாமல் போன அன்று அந்த வீட்டில் இருந்து காணாமல் போன ராகவேந்திர குமாரை  காவல்துறையினர் தேடி வருகின்றனர்.