கொள்ளிவைக்க தயாரான மகன்! இறுதி நொடியில் அசைந்த சடலம். அடுத்தடுத்து நடந்த பகீர் சம்பவம்,

கொள்ளிவைக்க தயாரான மகன்! இறுதி நொடியில் அசைந்த சடலம். அடுத்தடுத்து நடந்த பகீர் சம்பவம்,


Body moved at funeral stage in orisa

இறந்தவர் இறுதி சடங்கில் உயிர் பிழைத்துவிட்டார், அடக்கம் செய்யும் முன் இறந்தவர் உயிருடன் எழுந்தார் இப்படி ஏகப்பட்ட செய்திகளை நாம் படித்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். அதுபோன்ற சம்பவங்களில் ஒன்றுதான் இது.

ஒரிசா மாநிலம் கஞ்சம் என்னும் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மாலிக். 55 வயதாகும் மாலிக் ஆடு, மாடு மேய்ப்பதை தொழிலாக செய்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆடு, மாடுகளை ஒட்டிக்கொண்டு வழக்கம் போல் அவற்றை மேய்க்க சென்றுள்ளார் மாலிக்.

பொழுது சாய்ந்து ஆடு, மாடுகள் தானாக வீட்டிற்கு வந்துவிட்டன. ஆனால், நீண்ட நேரமாகியும் மாலிக் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் மாலிக்கை தேடி காட்டுக்குள் சென்றுள்ளனர். அங்கு பேச்சு மூச்சு இல்லாமல் மாலிக் சாய்ந்து கிடந்தார். மாலிக் இறந்துவிட்டதாக எண்ணி அவரை வீட்டிற்கு தூக்கிவந்து உறவினர்கள் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்னனர்.

Mystery

இதனை அடுத்து மாலிக்கின் உடலை எரிப்பதற்காக தூக்கி சென்று அங்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தபோது மாலிக்கின் தலை அசைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாலிக்கை பரிசோதித்த மருத்துவர்கள் மாலிக் இறக்கவில்லை என்று கூறி, மயக்கத்தில் இருந்த அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு மாலிக் தற்போது நலமுடன் உள்ளார். இறந்ததாக நினைத்த தனது கணவர் மீண்டும் உயிருடன் வந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக மாலிக்கின் மனைவி கூறியுள்ளார்.