இசைஞானியை அவமதிப்பதா? - பாஜக தலைவர் ஜே.பி நட்டா கடும் கண்டனம்.!

இசைஞானியை அவமதிப்பதா? - பாஜக தலைவர் ஜே.பி நட்டா கடும் கண்டனம்.!


bjp-president-jp-nadda-supports-ilayaraja

அம்பேத்கரையும் - பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு பேசிய விவகாரத்தில் இளையராஜாவுக்கு இடதுசாரி அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு கண்டனம் தெரிவித்து இளையராஜாவுக்கு ஆதரவாக பாஜக தொண்டர்கள் களமிறங்கினர். 

இதனால் சமூக வலைத்தளங்களில் பாஜக Vs இடதுசாரி ஆதரவாளர்கள் சண்டையானது நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசையும் இளையராஜாவுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், பாஜக தலைவர் ஜே.பி நட்டா இளையராஜாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

bjp

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகளவில் தலைசிறந்த இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவை அவமதித்து செயல்படுவதா? அவரின் கருத்துக்கள் பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்வதுதான் ஜனநாயகமா?.. இது முற்றிலும் தவறான அணுகுமுறை" என்று தெரிவித்துள்ளார்.